Enter your Email Address to subscribe to our newsletters

காசியாபாத், 16 ஜூன் (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் கோவிந்தபுரம் பகுதியில் உள்ள பாபா மார்க்கெட்டில் இன்று அதிகாலை 4-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிக கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கர்கள் மற்றும் நுரை தெளிக்கும் வாகனம் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்களின் தொடர் முயற்சிக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் இதுவரை உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தீப்பிடித்ததை அடுத்து, தீயணைப்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சென்றபோது, பாதிக்கப்பட்ட அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு ஷட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கடைகளுக்கும், உள்ளே இருந்த பொருட்களுக்கும் ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b