Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 18 ஜூன் (ஹி.ச.)
தெரு வியாபாரிகள் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாகக் கூறி மேற்கு வங்க மாநிலம் தர்மதலாவில் நேற்று நடைபெற்ற போராட்டப் பேரணியில் அம்மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
இந்த போராட்டத்தில் ஏராளமான கட்சி உறுப்பினர்களும் நூற்றுக்கணக்கானோரும் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரு வியாபாரிகளின் போராட்டப் பேரணியில் கலந்துகொண்டதை மேற்கு வங்க அமைச்சர் திலிப் கோஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோஷ் கூறுகையில்,
தெரு வியாபாரிகள் தொடர்பான தற்போதைய பிரச்சனைகளுக்கு மம்தா பானர்ஜியே காரணம் என்றும், சாலை ஆக்கிரமிப்புகளை அவர் அனுமதித்தார்.
மம்தா பானர்ஜியின் நிலைமை என்னவென்றால், அவருக்கு கட்சியும் இல்லை, தொண்டர்களும் இல்லை, கட்சி அலுவலகமும் இல்லை. தற்போது ஊடகங்களில் இருப்பதற்காக கடைசி முயற்சியாக தெரு வியாபாரிகளுடன் சேர்ந்துள்ளார்.
யாரிடம் பணம் வாங்கிக்கொண்டு சாலைகளில் அமர அனுமதித்தாரோ, அந்த வியாபாரிகளுக்கு அவரே முழுப் பொறுப்பு.
மேலும், சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
சாலைகளை சீரமைத்து மக்களின் வாழ்க்கையில் நிவாரணம் கொண்டுவர அரசு செயல்படும். எனவே, யாரும் சாலைகளில் அமர்ந்தால் அது நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b