15 லட்சம் இளைஞர்களுக்கு ரூ.2400 கோடி ஊக்கத்தொகை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
புதுடெல்லி, 19 ஜூன் (ஹி.ச.) நாடு முழுவதும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தும் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், 15 லட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை பிரதமர்
15 லட்சம் இளைஞர்களுக்கு ரூ.2400 கோடி ஊக்கத்தொகை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்


புதுடெல்லி, 19 ஜூன் (ஹி.ச.)

நாடு முழுவதும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தும் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், 15 லட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று மாலை 5:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, பயனாளிகளுக்கு இந்த ஊக்கத்தொகையை நேரடியாக வழங்க உள்ளார்.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆதரிப்பது மற்றும் முறைசார் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இத்திட்டத்தின் கீழ், முதன்முறையாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 வரையும், புதிதாக கூடுதல் பணியாளர்களை அமர்த்தும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு ஒரு பணியாளருக்கு ரூ.3,000 வரையும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களை முறைசார் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களின் திறனை வளர்த்து, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு இந்த ஊக்கத்தொகை திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b