சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக சந்தீப் மிட்டல் நியமனம்
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி வந்த சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது. காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக சந்தீப் மிட்டல் நியமனம்


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி வந்த சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது.

காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சந்தீப் மிட்டல், ஆயுதப்படை டிஜிபியாக சிறப்பாக பணியாற்றி வந்தார். காவல்துறையினருக்கான பயிற்சி, நவீனமயமாக்கல் மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பொறுப்பேற்பதன் மூலம், காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளுக்கான தேர்வு முறைகளை வெளிப்படைத்தன்மையுடனும், திறம்படவும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய மாறுதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை காவல் அகாடமியின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த ஆர். தினகரன் ஐ.பி.எஸ், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சி அகாடமியில் இவரது செயல்பாடுகள் புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு பெரும் உத்வேகம் அளித்து வந்தன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளில் சேர்கின்றனர்.

புதிய தலைவரின் நியமனம் தேர்வு நடைமுறைகளை மேலும் விரைவுபடுத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உதவும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b