Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் வரும் ஜூன் 26ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் தமிழரசன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக நடைபெறும் இந்தக் கூட்டங்களில், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் பேரவையுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் கோரிக்கைகள், நலத்திட்டங்கள், வரவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கவும், எதிர்கால செயல்திட்டங்களை வகுக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து, கூட்டங்கள் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b