Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 20 ஜூன் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் சிவ குரு பிரபாகரன் மாவட்ட எஸ்.பி. சந்தீஷ் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார் .
அதனைத் தொடர்ந்து சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ரூ 6.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா,
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பாக குடிநீர் பிரச்சினை, தொழிற்சாலை வசதிகள் அமைத்தல், மீனவர் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் ஒவ்வொரு பிரச்சனையாக தீர்ப்பதற்கு தவெக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN