Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 20 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.
குறிப்பாக, கடந்த சில தினங்களாக மழையின் அளவு குறைந்து, அருவிகளில் குறைந்த அளவே தண்ணீரானது கொட்டி வரும் நிலையில், குறைந்த அளவு கொட்டி வரும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.
குறிப்பாக இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது களைகட்டி உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN