65 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்
புதுடெல்லி, 23 ஜூன் (ஹி.ச.) 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் 65 சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கி
இன்று 65 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்


புதுடெல்லி, 23 ஜூன் (ஹி.ச.)

2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் 65 சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

இன்றைய விழாவில் 2 பத்ம விபூஷன், 7 பத்ம பூஷன் மற்றும் 56 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விருது பெறுபவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மலையாள திரையுலகின் மூத்த நடிகர் மம்முட்டி ஆகியோரும் அடங்குவர்.

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த மே 25 ஆம் தேதி முதற்கட்டமாக 65 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

நாட்டின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விழாவில் வழங்கப்படுவது வழக்கம்.

Hindusthan Samachar / vidya.b