தமிழக வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் வழக்கறிஞர்கள் போட்டியிட கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.) வழக்கறிஞர் சங்கத்தில் நிர்வாகிகளுக்கான தேர்தலில் தொடர்ந்து இரண்டாம் முறை தேர்தலில் போட்டியிட தடை விதித்து உச்சநீதிமன்றம் SLP No 1404/2025 ல் 16-04-2026 ம் தேதி பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச்
G


தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.)

வழக்கறிஞர் சங்கத்தில் நிர்வாகிகளுக்கான தேர்தலில் தொடர்ந்து இரண்டாம் முறை தேர்தலில் போட்டியிட தடை விதித்து உச்சநீதிமன்றம் SLP No 1404/2025 ல் 16-04-2026 ம் தேதி பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் கடந்த ஐந்தாம் தேதி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமம் கடந்த 2021 ஆம் ஆண்டு 13-02-2021 தேதியிட்ட ROC 285/2021-ல் உள்ள நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 05-06-2026 அன்று பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ளது.

ஆனால் அதை மீறி தமிழக முழுவதும் வழக்கறிஞர் சங்கங்களில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருவதாகவும் அதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு சில வழக்கறிஞர் சங்கத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தலைவராக பதவியில் தொடரும் அவலம் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதனால் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பதவியில் இரண்டாம் முறை போட்டியிட தடை விதித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஒரு முறை பதவி வகித்த பின்னர் ஒரு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் போட்டியிடலாம் என்று கூறியுள்ளது.

தொடர்ந்து இரண்டாம் முறை போட்டியிட தடை விதித்துள்ள நிலையில் பார் கவுன்சில் சுற்றறிக்கையை தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்கத்தில் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று முறையாக போட்டியிட்ட நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் A.R. சுப்பிரமணியம் உட்பட பல வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் அது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்தாத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / Durai.J