Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
கொடி பாகற்காய் சாகுபடி என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு சிறந்த பந்தல் சாகுபடி காய்கறி பயிராகும்.
இதன் மருத்துவ குணங்கள் மற்றும் சந்தை தேவை காரணமாக, விவசாயிகளுக்கு இது ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தை ஈட்டித் தருகிறது.
இந்த சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள இருமண்பாடு அல்லது மணற்பாங்கான வண்டல் மண் மிகவும் ஏற்றது.
மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும்.
வெப்பமண்டல பயிரான இதற்கு 25°C முதல் 35°C வரையிலான வெப்பநிலை சாகுபடிக்கு உகந்தது. ஆடிப் பட்டம் (ஜூலை - ஆகஸ்ட்) மற்றும் தைப் பட்டம் (ஜனவரி - பிப்ரவரி) சாகுபடிக்கு மிகச் சிறந்தவை.
கோ 1, எம்.டி.யு 1, அற்கா ஹரித், பிரியா, மற்றும் பல்வேறு தனியார் வீரிய ஒட்டு (Hybrid) ரகங்கள். நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும். 2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் மற்றும் குழி எடுக்க வேண்டும்.
ஏக்கருக்கு சுமார் நெடி ரகங்களுக்கு 2 கிலோ விதைகளும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 600-800 கிராம் விதைகளும் தேவைப்படும்.விதைகளை நடும் முன் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்வது வேர் அழுகல் நோயைத் தடுக்கும்.ஒரு குழிக்கு 4 முதல் 5 விதைகள் வீதம் 2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
கொடிகள் படர்வதற்கு கம்பி அல்லது நைலான் வலை கொண்டு பந்தல் அமைப்பது அவசியம்.பந்தல் அமைப்பதால் காய்கள் தரையில் படாமல், நேராகவும், பூச்சித் தாக்குதல் இல்லாமலும் தரமாக வளரும்.
விதைத்தவுடன் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது நீர் மற்றும் உரப் பயன்பாட்டை மிச்சப்படுத்தும்.செடி வளர்ந்தவுடன் தழை, மணி, சாம்பல் சத்துக்களை (NPK) பரிந்துரைக்கப்பட்ட அளவில் பிரித்து வழங்க வேண்டும்.
வேப்ப எண்ணெய்க் கரைசல் (3%) தெளிப்பதன் மூலம் இலை வண்டுகள் மற்றும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். சாம்பல் நோய் தாக்கினால் பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சாணக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.
விதைத்த 55 முதல் 60 நாட்களில் முதல் அறுவடை தொடங்கும். வாரத்திற்கு இரண்டு முறை காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
முறையான பராமரிப்பு மூலம் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மகசூல் பெற முடியும்.
அரை ஏக்கர் நிலத்தில் பாகற்காய் சாகுபடி செய்ய ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய முதலில் தொழு உரம் அவசியம்.
இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் இயற்கை முறையில் செய்தாலும், ரசாயன உரங்களை பயன்படுத்தி செய்தாலும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாது. எப்படிப் பார்த்தாலும் மொத்த அறுவடை கணக்கில் 40 சதவீத காய் பூச்சி தாக்குதலால் வீணாகி விடுகிறது.
இதனால்தான் முழுக்க முழுக்க தொழு உரத்தை பயண்படுத்தினால் மட்டுமே ஓரளவிற்கு பூச்சி தாக்குவதை கட்டுப்படுத்த முடியும். கார்த்திகை, மார்கழி, தை இந்த மூன்று மாதம் பாகற்காய் சாகுபடி செய்ய உகந்த மாதமாகும்.
அப்படியே பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி 80 சதவீதம் அறுவடை செய்தாலும் விற்பனையில் பிரச்சனைகள் ஏற்படும். மார்க்கெட்டில் ஒரே விலை கிடைக்காது. திடீரென உயரும். திடீரென கிலோ மூன்று ரூபாய்க்கு கூட போகும்.
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கூண்டு தோட்டம் முழுவதும் அங்காங்கே மாட்டியுள்ளோம். இதில் இருந்து பரவும் பூச்சிக்கொல்லி வாசத்தால் பூச்சிகள் கூண்டின் உள்ளே செல்லும் போது இறந்து விடும். இதை வைத்த பின்னரே பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடிகிறது.
இந்தப் பாகற்காய் சாகுபடி அதிகளவு விவசாயிகள் மேற்கொண்டால் தஞ்சை மட்டும் இன்றி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பலாம். நல்ல லாபம் கிடைக்கும். சரியான முறையில் சாகுபடியை மேற்கொள்ளும் போது நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும்.
மொத்தம் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்தாலும் செலவுகள் போக ரூ.1.50 லட்சம் வரை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்பதால் லாபம் ஒரு நாள் அதிகமாக இருக்கும் ஒரு நாள் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் கொடி பாகற்காய் சாகுபடி நிச்சயம் லாபகரமான ஒன்று தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Hindusthan Samachar / vidya.b