பாராளுமன்ற பொது கணக்குக் குழுவில் சி.ஏ.ஜி அறிக்கைகள் குறித்து இன்று ஆய்வு
புதுடெல்லி, 24 ஜூன் (ஹி.ச.) காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால் தலைமையிலான பாராளுமன்ற பொது கணக்குக் குழு (PAC), சமீபத்திய இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (C&AG) அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக இன்று (ஜ
பாராளுமன்ற பொது கணக்குக் குழுவில் சி.ஏ.ஜி அறிக்கைகள் குறித்து இன்று ஆய்வு


புதுடெல்லி, 24 ஜூன் (ஹி.ச.)

காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால் தலைமையிலான பாராளுமன்ற பொது கணக்குக் குழு (PAC), சமீபத்திய இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (C&AG) அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக இன்று

(ஜூன் 24 புதன்கிழமை) காலை 11:00 மணிக்கு பாராளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் (PHA) கூடுகிறது.

நிகழ்ச்சி நிரலின்படி,

முதலில் தணிக்கை அதிகாரிகளிடமிருந்து குழு விளக்கம் பெறும். அதைத் தொடர்ந்து, இரண்டு விஷயங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சக பிரதிநிதிகளிடம் வாய்மொழி சாட்சியம் பதிவு செய்யப்படும்.

முதலாவதாக, 2025-ம் ஆண்டு C&AG அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நிறுவுதல் மற்றும் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தணிக்கை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு முன் ஆஜராகி விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற பொது கணக்குக் குழுவின் முந்தைய கூட்டம் ஜூன் 4-ஆம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனாவின் கீழ் திறன் மேம்பாடு குறித்த செயல்திறன் தணிக்கை என்ற தலைப்பில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக பிரதிநிதிகளிடம் வாய்மொழி சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

மேலும், துணைக்குழு-II மற்றும் துணைக்குழு-VI ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கைகளையும் குழு பரிசீலித்து ஏற்றுக்கொண்டது.

இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர், சட்டம் மற்றும் நீதி தொடர்பான துறைசார் பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம், பாராளுமன்ற இணைப்பு விரிவாக்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் சிவில் சர்வீசஸ் (முதல்நிலை) தேர்வில் உள்ள சிவில் சர்வீசஸ் திறனறி தேர்வு (CSAT) குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய அரசில் காலியிடங்களை நிரப்புதல் மற்றும் சிவில் சர்வீசஸ் (முதல்நிலை) தேர்வின் CSAT தாக்கம் மற்றும் விளைவுகள் குறித்து, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) செயலாளர் மற்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (UPSC) செயலாளர் ஆகியோரின் கருத்துக்களை குழு கேட்டறிந்தது.

பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் உத்தரப்பிரதேச டிஜிபியுமான பிரிஜ் லால் தலைமையில் இக்குழு செயல்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், முதல்நிலைத் தேர்வில் உள்ள CSAT பகுதியை மறுபரிசீலனை செய்யுமாறு UPSC-யிடம் இக்குழு வலியுறுத்தியிருந்தது. கணித மற்றும் பகுப்பாய்வு திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, அறிவியல் பின்னணி இல்லாத, கிராமப்புற மற்றும் வசதி குறைந்த விண்ணப்பதாரர்களுக்கு பாதகமாக அமையலாம் என்று குழு சுட்டிக்காட்டியது.

2011-ல் அறிமுகப்படுத்தப்பட்ட CSAT, பொது அறிவுடன் சேர்த்து தர்க்கரீதியான சிந்தனை மற்றும் திறனை சோதிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b