'ஆபரேஷன் ஷேருவாலி' - டோரிமால் காடுகளில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தீவிரம்
ஜம்முகாஷ்மீர், 25 ஜூன் (ஹி.ச) ஜம்மு-காஷ்மீரின் ராஜௌரி மாவட்டம், கம்பிர் முக்லான் பகுதியில் உள்ள டோரிமால் காட்டுப்பகுதியில் ''ஆபரேஷன் ஷேருவாலி'' என்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இன்று 34வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர
'ஆபரேஷன் ஷேருவாலி' - டோரிமால் காடுகளில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தீவிரம்


ஜம்முகாஷ்மீர், 25 ஜூன் (ஹி.ச)

ஜம்மு-காஷ்மீரின் ராஜௌரி மாவட்டம், கம்பிர் முக்லான் பகுதியில் உள்ள டோரிமால் காட்டுப்பகுதியில் 'ஆபரேஷன் ஷேருவாலி' என்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இன்று 34வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அடர்ந்த காடுகள் சூழ்ந்த இந்தப் பகுதியில் பிரம்மாண்டமான தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புணர்வுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடவடிக்கையின் இலக்குகளை முழுமையாக அடையும் வகையில் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டோரிமால்-கம்பிர் முக்லான் வனப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், விரிவான தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதி முழுமையாக சோதனை செய்யப்பட்டு, அனைத்து இலக்குகளும் நிறைவேறும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மே மாத இறுதியில் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் ஷேருவாலி', ராஜௌரி மாவட்டத்தின் அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் பதுங்கியுள்ள ஊடுருவிய பயங்கரவாதிகளை கண்டறிந்து கைது செய்யும் நோக்கத்துடன் நடத்தப்படும் பல அமைப்புகள் இணைந்த பிரம்மாண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகும்.

எல்லை மாவட்டமான ராஜௌரியில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாதுகாப்பு படையினரின் உறுதியை இந்த நீண்ட நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இதற்கிடையே, கடந்த ஜூன் 16ஆம் தேதி நௌஷேரா செக்டாரின் முன்னணி காலால் பகுதியில், கட்டுப்பாட்டு கோட்டு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்த கண்ணிவெடியில், ஒரு இளநிலை ஆணைய அதிகாரி உட்பட நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

படைப்பிரிவு வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் இருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக நௌஷேரா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ கமாண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / vidya.b