Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 26 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்தவர் பால்பாண்டி, இவரது நண்பர் உசிலம்பட்டி நகர் மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழியின் மகன் கவிக்குமார்.
சிறு வயது முதலே உயிர் தோழர்களான இருவரும் கட்டுமான பணிக்கு ஒன்றாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக நாமக்கலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு நேற்று உசிலம்பட்டி திரும்பிய இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
உசிலம்பட்டி இரயில் நிலையம் அருகில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர் பால்பாண்டியை கவிக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் கவிக்குமாரை கைது செய்து இவர்கள் மது அருந்தும் போது உடனிருந்த கேசவன் என்பவரை தேடி வருகின்றனர்.
போதையில் ஏற்பட்ட தகராறில் உயிர் நண்பனை கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / Durai.J