11 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல் -ஆந்திர அரசு அதிரடி முடிவு
அமராவதி , 27 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 11 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்த மாநில அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. 2002–03 டிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு, 2004-க்கு பிறகு பணியில் சேர்
A


அமராவதி , 27 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 11 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்த மாநில அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

2002–03 டிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு, 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு தற்போது மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2004 செப்டம்பர் மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட நியமன அறிவிப்புகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தகுதியான ஊழியர்களுக்கு OPS பயன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விஜயவாடாவில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.

மேலும், இந்த முயற்சிக்காக தொடர்ந்து செயல்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பாராட்டப்பட்டனர்.

இது குறித்து ஊழியர் சங்கத் தலைவர் கூறுகையில்,

ஓய்வூதிய பாதுகாப்பு என்பது

ஊழியர்களின் அடிப்படை உரிமை.

மாநிலத்தின் நிதிநிலை சவாலாக இருந்தாலும், அரசு எடுத்த இந்த முடிவு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

இதற்கிடையில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), அரசுச் சங்கங்கள் மற்றும் குடியிருப்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 இலிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA