Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் மாரடைப்பால் காலமான தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் சாந்தனு, மகள் சரண்யா மற்றும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
பாக்யராஜின் மறைவுச் செய்தி வெளியாகியதிலிருந்து அவரது இல்லத்தில் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கமல்ஹாசன், ராகவா லாரன்ஸ், சிபிராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து அவரது திரையுலகப் பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளனர்.
73 வயதான பாக்யராஜ் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட அவர், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என தனக்கென தனி முத்திரை பதித்தார்.
தமிழக அரசு சார்பில் பாக்யராஜுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam