Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
மாரடைப்பால் காலமான தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாக்யராஜின் உடலுக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பதிவிலும்,
தமிழ் திரையுலகம் ஆசான் பாரதிராஜாவை இழந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரான பாக்யராஜையும் இழந்துள்ளது.
இந்திய சினிமாவின் முடிசூடா திரைக்கதை மன்னராக விளங்கிய பாக்யராஜின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam