2027 உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தல் - நாளை முதல் உத்தரகண்ட் காங்கிரஸ் சார்பில் மக்கள் பிரச்சாரம் தொடக்கம்
உத்தரகண்ட், 27 ஜூன் (ஹி.ச) 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் கட்சி வரும் நாளை (ஜூன் 28) முதல் மாநிலம் தழுவிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மாநில அரசை எதிர்கொள்ளும் வகையில் தொடங்கப்படும் இந்தப் பிரச்சா
Public campaign by Uttarakhand Congress to begin tomorrow.


உத்தரகண்ட், 27 ஜூன் (ஹி.ச)

2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் கட்சி வரும் நாளை (ஜூன் 28) முதல் மாநிலம் தழுவிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

மாநில அரசை எதிர்கொள்ளும் வகையில் தொடங்கப்படும் இந்தப் பிரச்சாரம், கட்சியின் தேர்தல் வியூகத்தின் முதல் கட்டமாகும்.

இதன் மூலம் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதை கட்சி இலக்காகக் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, 10 மாவட்டங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, சீரழிந்து வரும் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள், வேலையின்மை, ஊழல், தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள், பணவீக்கம் உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிய பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவார்கள்.

இது குறித்து உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால் கூறுகையில்,

பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், கள யதார்த்தத்தை மக்கள் முன் கொண்டு செல்லும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. மாநிலம் முழுவதும் அரசின் தோல்விகளை கட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரச்சாரத் திட்டப்படி, முதல் மண்டலத்தில் பித்தோராகர், பாகேஸ்வர், சம்பாவத் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இதற்கு கணேஷ் கோடியால் தலைமை தாங்குகிறார்.

இரண்டாவது மண்டலத்தில் ருத்ரபிரயாக், பௌரி கர்வால், சமோலி மாவட்டங்கள் உள்ளன. இங்கு தேர்தல் மேலாண்மைக் குழுத் தலைவர் ஹரக் சிங் ராவத் மற்றும் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள்.

மூன்றாவது மண்டலமான உத்தர்காசி, தெஹ்ரி மாவட்டங்களுக்கு பிரிதம் சிங் பொறுப்பேற்கிறார்.

நான்காவது மண்டலத்தில் அல்மோரா, நைனிடால் மாவட்டங்கள் அடங்கும். இதனை முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கரன் மஹாரா வழிநடத்துகிறார்.

முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா ஆகியோர் நான்கு மண்டலங்களிலும் பங்கேற்க கட்சி அனுமதி அளித்துள்ளது.

உத்தரகண்ட் முழுவதும் பிரச்சாரத்தை வலுப்படுத்த இரு தலைவர்களும் அனைத்து மண்டலங்களுக்கும் செல்ல வேண்டும் என்பது கட்சியின் நோக்கமாகும்.

2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தப் பிரச்சாரம் மாநில அரசின் குறைபாடுகளை அம்பலப்படுத்தி அரசியல் மாற்றத்திற்கான வேகத்தை உருவாக்கும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b