டெல்லி போலீஸ் அதிரடி - 49,000 லிட்டர் மதுபானம் பறிமுதல்
டெல்லி, 28 ஜூன் (ஹி.ச.) இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மதுக்கடைகள் மூடப்படும் ''ட்ரை டே'' என அறிவிக்கப்பட்ட நிலையில், கலால் துறை தொடர்பான புகார்களை விசாரிக்க டெல்லி போலீஸார் “ஆபரேஷன் சுத்த் பிரஹார்” நடவடிக்கையை தொடங்கினர். இதில் 49,000 லிட
Delhi Police Crackdown: 49,000 Litres of Liquor Seized


டெல்லி, 28 ஜூன் (ஹி.ச.)

இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மதுக்கடைகள் மூடப்படும் 'ட்ரை டே' என அறிவிக்கப்பட்ட நிலையில், கலால் துறை தொடர்பான புகார்களை விசாரிக்க டெல்லி போலீஸார் “ஆபரேஷன் சுத்த் பிரஹார்” நடவடிக்கையை தொடங்கினர்.

இதில் 49,000 லிட்டர் மதுபானம் மற்றும் 720 பீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வடகிழக்கு மாவட்ட துணை ஆணையர் ராஹுல் அல்வால் கூறுகையில்,

மதுக்கடைகள் மூடும் நடவடிக்கைகளில் மேலும் கைதுகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை உள்ளடக்கிய ‘ஆபரேஷன் கவச்’ நடைமுறையைத் தொடர்ந்து, கலால் தொடர்பான வழக்குகள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்கள் மாவட்டம் ‘ஆபரேஷன் சுத்த் பிரஹார்’ தொடங்கியுள்ளது.

முஹர்ரம் தினம் ‘ட்ரை டே’ ஆக இருந்தது. சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து பல தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, எங்கள் காவல் நிலைய ஊழியர்கள் மற்றும் மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANS) பல்வேறு சோதனைகளை நடத்தினர்.

இதன் விளைவாக, ஐந்து காவல் நிலையங்களில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 27,200 குவார்ட்டர் பாட்டில்கள், அதாவது 49,000 லிட்டர் மதுபானம், 720 பீர் கேன்கள் மற்றும் சுமார் ரூ.42,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

என்று கூறினார்.

இதே போல் மிகப்பெரிய பறிமுதல் சோனியா விஹார் பகுதியில் நடந்தது. அங்கு 16,000 குவார்ட்டர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பஜன்புரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 11,000 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லியின் 15 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் 4,035 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதுடன், பெருமளவு போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 255 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

237 கிலோவுக்கு மேல் கஞ்சா, 5.1 கிலோ உயர்தர OG கஞ்சா, 1.09 கிலோ ஹெராயின், கோகைன், MDMA மற்றும் மெத்தம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.23.27 லட்சம் போதைப்பொருள் பணமும் கைப்பற்றப்பட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் குறிவைக்கப்பட்டன. ஆயுதச் சட்டத்தின் கீழ் 315 வழக்குகளில் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடுதலாக, 405 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 53,448 குவார்ட்டர் சட்டவிரோத மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b