சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 60 வயது நபர் போலீஸ் என்கவுன்டரில் படுகாயம்
புதவுன், 28 ஜூன் (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலம் புதவுன் மாவட்டத்தில் கடந்த ஜூன் 25 அன்று, 4 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வயல்வெளியில் வீசப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதில் சிறுமி மீட்கப்பட்டு, வழக
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 60 வயது நபர் போலீஸ் என்கவுன்டரில் படுகாயம்


புதவுன், 28 ஜூன் (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலம் புதவுன் மாவட்டத்தில் கடந்த ஜூன் 25 அன்று, 4 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வயல்வெளியில் வீசப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதில் சிறுமி மீட்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் அதே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 வயதுடைய அப்ரார் என்ற நபர் என தெரியவந்தது.

அந்த நபர், துப்பாக்கிச் சூட்டில் இரு கால்களிலும் காயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) அங்கிதா ஷர்மா தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அப்ரார் என்ற 60 வயது நபரை இன்று அதிகாலை 4:00 மணியளவில் கைது செய்ய போலீஸ் குழு சென்றபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

பதில் தாக்குதலில் அவரது இரு கால்களிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு எஸ்எஸ்பி ஷர்மா கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b