Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)
பிரபல மூத்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து இன்று காலை 9 மணியளவில் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வள்ளுவர் கோட்டம் சிக்னல், கோடம்பாக்கம் ஹைவே வழியாக ஆர்கே சாலை, காமராஜர் சாலை வழியாக ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று இறுதியாக பெசன்ட் நகர் மின்மயானம் வந்து அடைந்தது.
வழிநெடுகிலும் பொதுமக்கள் பாக்யராஜின் உடலுக்கு மலர்களை தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோர் இருந்தனர்.
பெசன்ட் நகர் மின் மயானத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரின் இறுதி சடங்கில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
பாக்யராஜின் உடலுக்கு அவரது மகன் சாந்தனு இறுதி சடங்குகளை செய்தார். அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b