Enter your Email Address to subscribe to our newsletters

மேற்கு வங்கம், 28 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்க அமைச்சர் திலிப் கோஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சீரான குடிமைச் சட்ட (UCC) மசோதா மாநில சட்டப்பேரவையில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
சீரான குடிமைச் சட்ட மசோதா கட்டாயம் நிறைவேற்றப்படும். மசோதா எப்போது தாக்கல் செய்யப்படும், அடுத்து என்ன நடக்கும் என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, உத்தராகண்ட் பிப்ரவரி 2024-ல் சீரான குடிமைச் ச kiட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து குஜராத் மார்ச் 2026-லும், அசாம் மே 2026-லும் மசோதாவை நிறைவேற்றின.
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில், சீரான குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.
Hindusthan Samachar / vidya.b