Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 29 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தை கஞ்சா மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் கூட்டணி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் அனிதா
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தில் கஞ்சா சாகுபடி மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக, கஞ்சா சாகுபடி வரலாறு காணாத அளவுக்கு குறைந்து, கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளது.
இதன் காரணமாக மாநிலத்தில் குற்றச்செயல்களின் விகிதமும் 14 சதவீதம் குறைந்துள்ளது.
கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 'ஈகிள்' சிறப்பு பணிக்குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்தக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இதுவரை சுமார் 1.20 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அறிவியல் முறையில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மாநிலங்களுக்கு இடையேயான கஞ்சா கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்களின் ரூ.24 கோடி மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க ஏஜென்சி பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் ரகசியமாக தெரிவிக்க 'ஈகிள்' சிறப்பு இணையதளமும், கட்டணமில்லா உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA