பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
திருச்சி, 29 ஜூன் (ஹி.ச.) விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற
Communist Party of India stages protest demanding full waiver of crop loans.


திருச்சி, 29 ஜூன் (ஹி.ச.)

விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் இடுபொருள் விலை உயர்வு, பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட பயிர் இழப்பு ஆகியவற்றால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இதனால் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர்க் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ள பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Hindusthan Samachar / vidya.b