Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 29 ஜூன் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர்.
சம்பத் ராயிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஷ்ரா உள்ளிட்ட பிற மூத்த அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெறப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அவினாஷ் சுக்லாவின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றதை அடுத்து விசாரணை தீவிரமடைந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவினாஷ் சுக்லாவின் சகோதரர் அபிஷேக் சுக்லா,
கோயில் நிதியை முறைகேடு செய்ததில் யாருக்காவது தொடர்பு இருப்பது தெரியவந்தால், குடும்பம் அவர்களை ஆதரிக்காது என்று கூறினார்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் தொடர்பான சமீபத்திய தகவல்களால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நியாயமான விசாரணைக்கு உறுதி அளிப்பதாகவும், பக்தர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் அறக்கட்டளை குறிப்பிட்டது.
பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஷ்ரா ஆகியோரின் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுள்ளதாகவும், இந்த விவகாரம் வரவிருக்கும் அறக்கட்டளைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அறக்கட்டளை உறுதிப்படுத்தியது.
ராமபிரானுக்கு காணிக்கையாக நேரடியாக வழங்கப்பட்ட வெள்ளி செங்கற்கள், நகைகள் உள்ளிட்ட அனைத்து மதிப்புமிக்க பொருட்களும் பாதுகாப்பாகவும், முழுமையாக கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்களுக்கு அறக்கட்டளை உறுதியளித்தது.
Hindusthan Samachar / vidya.b