பூரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழிபாடு
பூரி, 29 ஜூன் (ஹி.ச.) தேவ ஸ்நான பௌர்ணமியை முன்னிட்டு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பூரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். ஜெகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் புனித ‘ஸ்நான யாத்திரை’ நிகழ்வில் கலந்து கொண்டு தரி
Union Minister Dharmendra Pradhan offers prayers at the Puri Jagannath Temple


பூரி, 29 ஜூன் (ஹி.ச.)

தேவ ஸ்நான பௌர்ணமியை முன்னிட்டு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பூரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

ஜெகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் புனித ‘ஸ்நான யாத்திரை’ நிகழ்வில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

வருடாந்திர ரத யாத்திரைக்கு முன்னதாக நடைபெறும் முக்கிய சடங்குகளில் இதுவும் ஒன்றாகும்.

வழிபாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரதான் கூறுகையில்,

ஸ்நான பௌர்ணமி என்னும் புனித நாளில் மகாபிரபுவை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.

உலகளாவிய நெருக்கடி நிலவும் இந்த காலகட்டத்தில், மகாபிரபு ஜெகந்நாதரின் ஆசி மனித நாகரிகத்தின் மீதும், நம் இந்தியா மீதும், நம் ஒடிசா மாநிலத்தின் மீதும் நிலைத்திருக்கட்டும்.

அப்போதுதான் நம் அனைவரின் வாழ்விலும் செழிப்பும் மகிழ்ச்சியும் வரும். இறைவனின் ஆசியே நம் வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தேவ ஸ்நான பௌர்ணமி சடங்கில், மூன்று சகோதர தெய்வங்களுக்கும் 108 கலசங்களில் புனித நீர் கொண்டு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

இந்த சடங்கிற்குப் பிறகு, தெய்வங்கள் சுகவீனமடைவதாக நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து ‘அனசரா’ காலத்தில் அவை பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகி இருக்கும்.

பின்னர் வருடாந்திர ரத யாத்திரையின்போது மீண்டும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். பல நூற்றாண்டு பழமையான இந்த புனித நீராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

ஜெகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவிக்கு 108 கலசங்களில் புனித நீர் கொண்டு திருமஞ்சனம் செய்யப்படுவதே இந்த விழாவின் சிறப்பம்சம்.

இந்து மாதமான ஜேஷ்ட மாத பௌர்ணமி நாளில், பொதுவாக ஜூன் மாதத்தில் இது அனுசரிக்கப்படுகிறது. இது ஜெகந்நாதரின் பிறந்த நாளாகவும் நம்பப்படுகிறது.

ஜெகந்நாதர் கோயிலின் கருவறையில் இருந்து தெய்வங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ஸ்நான மண்டபம் எனப்படும் உயர்த்தப்பட்ட மேடையில் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

நீராட்டுக்குப் பின், தெய்வங்களுக்கு ‘கஜானன பேசம்’ அலங்காரம் செய்யப்படுகிறது.

யானை முகம் கொண்ட கணபதியைப் போல அலங்கரிக்கப்படும் இந்த அலங்காரம் ‘ஹாதி பேசம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆழமான குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த சடங்கு தெய்வங்களைத் தூய்மைப்படுத்தி கௌரவிப்பதுடன், புகழ்பெற்ற ரத யாத்திரைக்கு முன்பாக பக்தர்களுக்கு அரிய பொது தரிசனத்தையும் வழங்குகிறது.

நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க வருகை தருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b