Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 04 ஜூன் (ஹி.ச.)
தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ஆர் தன்னைப் பற்றி தவறாக கருத்து தெரிவித்திருக்க மாட்டார் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியுள்ளார்.
அமராவதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பவன் கல்யாணிடம், கே.டி.ஆர் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
கே.டி.ஆர் என்ன கூறினார் என்பதை முழுமையாக நான் பார்க்கவில்லை.
ஆனால், அவர் பொறுப்பற்ற வகையில் பேசக்கூடியவர் அல்ல. ஒருவேளை அவர் என்னுடைய முழு கருத்துகளையும் பார்க்காமல் பேசியிருக்கலாம். அவர் நல்ல நோக்கத்துடனேயே கருத்து தெரிவித்திருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
மேலும், எனக்கும் கே.டி.ஆருக்கும் நல்ல சகோதரத்துவ உறவு உள்ளது.
பல சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம். சில கொள்கை விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், அது எங்களது தனிப்பட்ட உறவை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை தேவையற்ற சர்ச்சையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், நாங்கள் மீண்டும் சந்திக்கும் போது இதுபற்றி சிரித்துக்கொண்டே பேசிக்கொள்வோம் என்றும் பவன் கல்யாண் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA