Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 04 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சர் லோகேஷ் , தனது பயணத்தின் மூன்றாவது நாளில் முக்கியமான தொழில்துறை சந்திப்பை நடத்தினார்.
அவர், ரஷ்யாவின் முன்னணி உலோக உற்பத்தி நிறுவனமான நோஹாஸ்டல்-எம் நிறுவனத்தின் தலைவர் இவான் டெம்சென்கோ
உடன் சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஸ்ரீசிட்டியில் ரயில்வே மில் அமைக்க கோரிக்கை
இந்த சந்திப்பில் அமைச்சர் லோகேஷ், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டி பகுதியில் ரயில்வே டிராக் ரோலிங் மில் அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.
மேலும், அதிநவீன எலக்ட்ரிக் ஆர்க் ஃபர்னேஸ் (EAF) தொழில்நுட்பத்தில் அடிப்படையிலான ஸ்டீல் பிளான்ட் இந்தியாவில் அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்
சென்னை–பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் உள்ள ஆட்டோமொபைல் மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளுக்காக தேவையான மூலப்பொருட்களை வழங்கும் வகையில் வயர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும், லாஜிஸ்டிக்ஸ் ஹப் மற்றும் கூட்டு முயற்சி
(Joint Venture) திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
நோவோஸ்டல்-எம் நிறுவனம் பரிசீலனைக்கு ஒப்புதல்
நோஹாஸ்டல்-எம் தலைவர் இவான் டெம்சென்கோ கூறுகையில், தங்கள் நிறுவனம் ஆண்டுக்கு 2.8 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்து 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் முன்வைத்த திட்டங்கள் ஈர்க்கக்கூடியவை என தெரிவித்த அவர், அவற்றை நிறுவனத்தின் நிர்வாக குழுவில் விவாதித்து பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆந்திராவுக்கு புதிய முதலீட்டு வாய்ப்பு
இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தால், ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்டீல், ரயில்வே மற்றும் தொழில்துறை துறைகளில் பெரிய அளவிலான முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA