Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 04 ஜூன் (ஹி.ச.)
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் அரசியல் செய்யப்படுவதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மேகதாது திட்டம் கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டம் என்றும், இதனை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக இந்த திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அணை கட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும், மாறாக காவிரி நீர் மேலாண்மைக்கு இது உதவும் என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், தமிழகத்தின் எதிர்ப்புகளை அரசியல் நோக்கத்துடன் அணுகக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான அரசியல் மற்றும் நீர்வள விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 30–40 ஆண்டுகளாக இந்த திட்டம் குறித்து பேசி வருகிறோம்.
தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் நடைபெற்று வருகிறது.
ஆனால் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P