Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 ஜூன் (ஹி.ச.)
நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
பிரதமரின் கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு தொடர்பான செயல்திறன் தணிக்கை குறித்து இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையின் அடிப்படையில், தணிக்கை துறையின் விளக்கத்துடன் இக்கூட்டம் தொடங்கவுள்ளது.
இதைத் தொடர்ந்து, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பிரதிநிதிகளிடமிருந்து வாய்மொழி சாட்சியம் பதிவு செய்யப்படும்.
மேலும், துணைக்குழு-II (பாதுகாப்பு) மற்றும் துணைக்குழு-VI (விதிமுறை மீறல்) ஆகியவை ஒப்புதல் அளித்த வரைவு அறிக்கைகளை குழு பரிசீலித்து ஏற்க உள்ளது.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் முக்கிய பிரச்சினைகளில், மின்னணு முறையில் மேம்படுத்தப்பட்ட 155மிமீ/45 காலிபர் துப்பாக்கி அமைப்பான ‘தனுஷ்’ உற்பத்தியில் ஏற்பட்ட தாமதம், பத்மால் ஆயுதத் தொழிற்சாலையால் ராணுவத்துக்கு வழங்கப்பட்ட குறைபாடுள்ள வெடிமருந்துகளை மாற்றியதால் ஏற்பட்ட ₹62.10 கோடி இழப்பு, மற்றும் பாதுகாப்பு ஆஃப்செட் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகளில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படாத தணிக்கை பத்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்புகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதது மற்றும் அதிகப்படியான செலவினங்கள் தொடர்பான விதிமுறை மீறல் குறித்த வரைவு அறிக்கையையும் குழு பரிசீலிக்க உள்ளது. காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் இக்குழுவின் தலைவராக உள்ளார்.
இதற்கு இணையாக, நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு கூட்டமும் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நாட்டின் பொதுவான பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் விளக்கமளிக்க உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b