Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 05 ஜூன் (ஹி.ச)
ஜூன் 18-ம் தேதி நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி 7 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவில் இருந்து போட்டியிடுகிறார்.
கர்நாடகாவில் இருந்து மன்சூர் அலி கான், பவன் கேரா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் இருந்து நீரஜ் டாங்கி, தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சக்ரவர்த்தி, ஜார்க்கண்டில் இருந்து
பிரணவ் ஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக, ஜூன் 3-ம் தேதி, 10 மாநிலங்களில் உள்ள 24 ராஜ்யசபா இடங்களுக்கான இரு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்கள்; ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்டில் 2 இடங்கள், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒரு இடம் என மொத்தம் 24 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது, ஜூன் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள ராஜ்யசபா காலியிடங்களுக்கான இடைத்தேர்தலுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b