'வந்தே மாதரம்' சுற்றறிக்கைக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி
சென்னை, 06 ஜூன் ( ஹி.ச.) அரசு நிகழ்ச்சிகளில் ''வந்தே மாதரம்'' பாடலை முதலில் இசைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு விழாக்களில்
case against the 'Vande Mataram' circular.


சென்னை, 06 ஜூன் ( ஹி.ச.)

அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முதலில் இசைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அரசு விழாக்களில் நிகழ்ச்சி நிரலின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே தொடங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் அந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து முறையாக வழக்கு தாக்கல் செய்யாமல் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும், இது மரபுக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு நிகழ்ச்சிகளில் பாரம்பரியப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b