ரூ.661 கோடி மோசடி வழக்கு - ஹரியானா, சண்டிகரில் 6 இடங்களில் சிபிஐ சோதனை
ஹரியானா, 07 ஜூன் (ஹி.ச) மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ரூ.661 கோடி மோசடி தொடர்பான விசாரணையில், இன்று சண்டிகர், பஞ்ச்குலா மற்றும் டெல்லி என்சிஆர் பகுதிகளில் உள்ள 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த மோசடி ஹரியானா அரசின் பல துறைகள், சண்டி
ரூ.661 கோடி மோசடி வழக்கு - ஹரியானா, சண்டிகரில் 6 இடங்களில் சிபிஐ சோதனை


ஹரியானா, 07 ஜூன் (ஹி.ச)

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ரூ.661 கோடி மோசடி தொடர்பான விசாரணையில், இன்று சண்டிகர், பஞ்ச்குலா மற்றும் டெல்லி என்சிஆர் பகுதிகளில் உள்ள 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

இந்த மோசடி ஹரியானா அரசின் பல துறைகள், சண்டிகர் யூனியன் பிரதேசம் மற்றும் சண்டிகர் CREST அமைப்பை பாதித்துள்ளது.

சிபிஐ வெளியிட்ட தகவலின்படி, ஹரியானா பிரிவைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் மெஸர்ஸ் விபாம் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநரின் வளாகங்களில் சோதனை நடைபெற்றது.

சண்டிகர், பஞ்ச்குலா மற்றும் டெல்லி என்சிஆர் பகுதிகளில் உள்ள வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஹரியானா பிரிவு மூத்த அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் மற்றும் மெஸர்ஸ் விபாம் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநரின் வளாகங்களும் அடங்கும். முறைகேடுகள் மற்றும் குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் பெறப்பட்டது தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, கணக்குகள் திறப்பதற்கும், நிதி பரிமாற்றம் செய்வதற்கும், பின்னர் அந்த நிதியை மாற்றுவதற்கும் உதவியுள்ளனர். IDFC First Bank மற்றும் AU Finance Bank தொடர்பாக தங்கள் உதவி மற்றும் செயலற்ற தன்மைக்காக முறைகேடான ஆதாயங்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த மெஸர்ஸ் விபாம் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கில், குற்றத்தின் மூலம் கிடைத்த பணம் வரவு வைக்கப்பட்டு, பின்னர் அது இயக்குநரின் தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது என்று சிபிஐ கூறியுள்ளது.

மேலும், குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை ஹரியானா மாநில ஊழல் தடுப்பு மற்றும் ஏசிபி பிரிவிடம் இருந்து சிபிஐ எடுத்துக்கொண்டது. சண்டிகரில் உள்ள பொருளாதார குற்றங்கள் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் குற்றவியல் சதி, அரசு நிதி மோசடி மற்றும் வங்கி அதிகாரிகள், அரசு ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று சிபிஐ தெரிவித்தது.

இந்த மோசடியால் ஹரியானா அரசின் 8 துறைகள், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் 2 துறைகள் (சண்டிகர் மாநகராட்சி உட்பட) மற்றும் சண்டிகர் CREST அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரூ.661 கோடி அரசு நிதி முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b