Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 07 ஜூன் (ஹி.ச .)
காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவியதைத் தொடர்ந்து, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் 2005-ன் கீழ், உலக சுகாதார அமைப்பு (WHO) 2026 மே 17 அன்று இந்த நிலையை சர்வதேச அக்கறைக்குரிய பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்தது.
மேலும், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் உகாண்டாவில் தற்போது பரவி வரும் பண்டிபுக்யோ வகை எபோலா வைரஸ் நோய்ப் பரவலை, ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Africa CDC) கண்ட அளவிலான பாதுகாப்பு தொடர்பான பொது சுகாதார அவசரநிலை (PHECS) என அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய அரசு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் எபோலா அறிகுறிகளுடன் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உகாண்டாவில் இருந்து சுற்றுலா வந்த அந்த பெண், எபோலாவுக்கு ஒத்த அறிகுறிகளுடன் காணப்பட்டதால், ஜெய்ப்பூரில் உள்ள ஆர்.யு.எச்.எஸ் (RUHS) மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது மாதிரிகள் புனேவில் உள்ள சிறப்பு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
புனே ஆய்வகத்தின் அறிக்கையில், அந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b