Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஜூன் (ஹி.ச.)
மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலுக்கு ஜூன் 1-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது.
வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் இன்றுடன்
(ஜூன் 8 ) நிறைவடைகிறது.
இந்த இடங்களில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா நான்கு இடங்களும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் தலா மூன்று இடங்களும், ஜார்கண்டில் இரண்டு இடங்களும், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் அடங்கும்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கான மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கும் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
பத்து மாநிலங்களில் உள்ள 24 இடங்களை நிரப்ப ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இது சட்டமன்ற அமைப்பின் கட்டமைப்பை தீர்மானிக்கும்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு (CEC), 2026-ம் ஆண்டுக்கான மாநிலங்களவை தேர்தல் மற்றும் கர்நாடகா சட்ட மேலவை இரு ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கு, மத்திய பிரதேசத்தில் இருந்து மகேஷ் கேவத் மற்றும் கர்நாடகாவில் இருந்து பேராசிரியர் டாக்டர் எம். நாகராஜா ஆகியோரை பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
கர்நாடகா சட்ட மேலவை இரு ஆண்டு தேர்தலுக்கு லிங்கராஜ் பாட்டீல் மற்றும் ரகு கௌதில்யா ஆகியோரை கட்சி தேர்வு செய்துள்ளது.
நாடாளுமன்ற மேலவைக்கான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து, நாடு முழுவதும் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b