அலிஷா அப்துல்லா அவதூறு வழக்கு - திருச்சி சூர்யா ஜாமீன் மனுவுக்கு போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 08 ஜூன் (ஹி.ச) பா.ஜ.க. பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட திருச்சி சூர்யா தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை முதன
Trichy


சென்னை, 08 ஜூன் (ஹி.ச)

பா.ஜ.க. பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட திருச்சி சூர்யா தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி சூர்யா கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தனது ஜாமீன் மனுவில்,

யூடியூப் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தேன்.

அப்பாவியான என்மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக உள்ளேன் என்று சூர்யா தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன், ஜாமீன் மனு தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை வரும் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ