அரசியல் கருத்துகள் தொடர்பான சமூக வலைதள கணக்குகள் முடக்கம் நீக்கம் – உயர்நீதிமன்றத்தில் தகவல்
சென்னை, 08 ஜூன் (ஹி.ச) அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிட்டதாக முடக்கப்பட்ட சமூக வலைதள கணக்குகளின் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படு
Social


சென்னை, 08 ஜூன் (ஹி.ச)

அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிட்டதாக முடக்கப்பட்ட சமூக வலைதள கணக்குகளின் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட சில பதிவுகளை நீக்கவும், அதனுடன் தொடர்புடைய கணக்குகளை முடக்கவும் சைபர் கிரைம் பிரிவு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, விஷ்வ இந்து பரிஷத்தின் வட தமிழகத் தலைவர் சொக்கலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட சமூக வலைதள கணக்குகளின் முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறை அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கணக்குகளை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது செல்லத்தக்கதல்ல என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ