Enter your Email Address to subscribe to our newsletters

ரிஷிகேஷ், 08 ஜூன் (ஹி.ச)
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சார் தாம் யாத்திரையின் நான்கு கோயில்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவை ஏப்ரல் 2026-ல் திறக்கப்பட்டன.
புனித யாத்திரை சுமுகமாக நடைபெற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் சார் தாம் யாத்ரா பயணிகள் முகாமில், நடைபெற்று வரும் சார் தாம் புனித யாத்திரையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பிடவும், மேம்படுத்தவும் இன்று பாதுகாப்புப் படையினர் ஒத்திகை நடத்தினர்.
பயங்கரவாத தடுப்புப் படை (ATS), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த பயிற்சியின்போது, ஒரு பயங்கரவாதி காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மூன்று பணயக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் காவல் அதிகாரி துஷார் போரா கூறினார்.
இது தொடர்பாக அவர் செயிதியாளர்களிடம் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு படைகளை விழிப்புடன் வைத்திருக்கவும், மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் ஒத்திகை நடத்தினோம். ஒத்திகையின்போது, ஒரு பயங்கரவாதியை காயப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பினோம்.
அதே நேரத்தில் மூன்று பணயக்கைதிகளை காப்பாற்றினோம். ATS, SDRF, தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டன. இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b