அருணாச்சலில் தொடர் மழை - வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் மத்திய குழு
அருணாச்சல பிரதேசம், 10 ஜூலை (ஹி.ச.) இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அருணாச்சல பிரதேசத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இடியுடன் கூடிய மிக கனமழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில
அருணாச்சலில் தொடர் மழை -  வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் மத்திய குழு


அருணாச்சல பிரதேசம், 10 ஜூலை (ஹி.ச.)

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அருணாச்சல பிரதேசத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இடியுடன் கூடிய மிக கனமழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் சமீபத்திய திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் நிஷ்தா திவாரி தலைமையிலான பல அமைச்சகங்களைச் சேர்ந்த மத்திய குழு (IMCT) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பல பகுதிகளுக்குச் செல்ல முடியாத சூழலிலும், மத்திய அரசின் முழு உதவியும் அளிக்கப்படும் என குழு உறுதி அளித்துள்ளது.

எட்டு உறுப்பினர்கள் கொண்ட இந்தத் தூதுக்குழு, கீழ் சியாங் மாவட்டம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தது. இருப்பினும், சீரற்ற வானிலை மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மிகவும் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை குழுவினரால் சென்றடைய முடியவில்லை.

ஆய்வு குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் நிஷ்தா திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

செயற்கைக்கோள் படங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, இழப்பு மதிப்பீட்டுக்கு உதவும் வகையில் மாநில நிர்வாகத்திடம் பகிரப்பட்டுள்ளது. தற்போது செல்ல முடியாத பகுதிகளுக்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் புதுடெல்லியில் இருந்து ஒரு குழு வந்துள்ளது.

இன்னும் மழை பெய்து கொண்டிருப்பதாலும், பல பகுதிகளுக்குச் செல்ல முடியாததாலும், இந்த வானிலையில் ஹெலிகாப்டர் இயக்கமும் சாத்தியமில்லாததாலும், குழு முடிந்தவரை பகுதிகளை உள்ளடக்கி வருகிறது.

ஆய்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் முடிவடையவில்லை. இன்று நாங்கள் கீழ் சியாங்கை சென்றடைய முயன்றோம், ஆனால் வழித்தடம் கடக்க முடியாததாக இருந்தது, எனவே எங்கள் பணிகளைத் தொடர்கிறோம். ஆய்வு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர் மழையால் பல பகுதிகள் இன்னும் சென்றடைய முடியாத நிலையில், மத்திய குழுவின் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்கின்றன.

Hindusthan Samachar / vidya.b