மதுபோதையில் அரசு பஸ்சை கடத்திச் சென்ற வாலிபர் கைது
ஐதராபாத் , ( ஹி.ச. ) தெலுங்கானா மாநிலம் ஜஹீராபாத் மாவட்டம் சென்னுரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதபோனியா வெங்கையா (வயது தெரியவில்லை). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த வெங்கையா, ஜஹீராபாத் மாவட்ட பஸ் நிலைய
A


ஐதராபாத் , ( ஹி.ச. )

தெலுங்கானா மாநிலம் ஜஹீராபாத் மாவட்டம் சென்னுரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதபோனியா வெங்கையா (வயது தெரியவில்லை). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மதுபோதையில் இருந்த வெங்கையா, ஜஹீராபாத் மாவட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை யாருக்கும் தெரியாமல் எடுத்து ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

அந்த பஸ்சை சுமார் 21 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற அவர், சிங்கராஜுபள்ளி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பஸ்சை மோதினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெங்கையாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA