Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 11 ஜூலை (ஹி.ச.)
ஈரோட்டில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
பட்டா வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களைய IAS அதிகாரியும் , அவருக்கு உறுதுணையாக IAS அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக கூடுதல் சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் 6 மாதத்திற்குள் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் . 9 மாதத்திற்குள் அனைத்தும் தீர்வு காணப்படும்
தமிழக அரசின் பணிகள், நிலைகள் தெளிவாக இருக்கும். தமிழக முதல்வரின் செயல்பாடுகளை இந்தியாவிலுள்ள அனைத்து முதல்வர்களும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல்வர் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவும் - திமுகவும் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்க முயன்றனர். தவெக தயாரானதால் தான் தப்பித்தோம்.
அதிமுக - திமுக கூட்டசி அமைந்தால் தவறில்லையே என மக்கள் கேட்பார்கள். தென்துருவம் - வட துருவம் சேராலாமா ? சேராது. அது போல் தான் இதுவும்.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய அரசு பணி வழங்கியது. அன்று யாரும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN