தடுப்பு அணைகளை கட்டித்தர 10 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை - அமைச்சர் வினோத்
திருநெல்வேலி, 11 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா ஆ
Minister Vinoth


திருநெல்வேலி, 11 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா ஆகியோர் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் முனைவர் பொ. சங்கர், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், உள்ளிட்ட வேளாண்மை துறை ஆணையர்கள் இயக்குனர்கள் முன்னிலையில்

வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2026-2027 தயாரிப்ப்தற்காக 10 மாவட்டங்கள் திருநெல்வேலி, தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன்கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து அமைச்சர் வினோத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது,

பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

விவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்காக மின் இணைப்பு வழங்குவதற்கான தக்கல் திட்டம் தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியே வரும். இன்று நெல்லையில் நடைபெற்ற பத்து மாவட்டங்களுக்கான விவசாயிகள் கூட்டத்தில் பல கிராமங்களில் தடுப்பணைகள் அமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

Hindusthan Samachar / ANANDHAN