Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 11 ஜூலை (ஹி.ச.)
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் பிரதான கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அறிவித்தார். இது கோயில் திட்டத்தின் இறுதிக் கட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர் கூறுகையில்,
கோயிலுடன் தொடர்புடைய நினைவிடப் பணிகளை நாங்கள் விரைவில் நிறைவு செய்ய உள்ளோம். தொடர்ந்து எரியவேண்டிய தீபம் அமைப்பது மட்டுமே மீதமுள்ள பணி. மற்ற கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மற்றொரு நினைவிடமும் ஜூலை இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இது கோயில் கட்டுமானப் பணியின் இறுதிக் கட்டமாகும். ஆக, கோயிலின் அனைத்து கட்டுமானப் பணிகளும் ஜூலை 30-க்குள் முடிவடையும்.
கோயிலின் முக்கிய கட்டமைப்பு நிறைவடையும் நிலையில், இரண்டு திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கோயில் வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள அரங்கத்தின் பணிகள் நவம்பர் அல்லது டிசம்பர் வரை நீடிக்கும். சுற்றுச்சுவர் செப்டம்பர் 30-க்குள் முடிவடையும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்
20 காட்சியகங்களைக் கொண்ட ராம் கதா சங்கரஹாலயின் கதைக்கரு இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் கூட்டங்களில் இந்த காட்சியகங்களுக்கான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் காணொளி விளக்கக்காட்சிகள் குறித்த இறுதி முடிவுகளை எடுக்க உள்ளோம்.
கோயிலின் தினசரி நிர்வாகம் மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு குறித்த ஏற்பாடுகளை நான் ஆய்வு செய்யவில்லை. அது எனது பணி வரம்புக்கு வெளியே உள்ளது.
என்று அவர் தெளிவுபடுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b