மும்பை வணிக-குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
மும்பை, 11 ஜூலை ( ஹி.ச.) மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள ஹில் ரோட்டில் செயல்படும் வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்
மும்பை வணிக-குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து


மும்பை, 11 ஜூலை ( ஹி.ச.)

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள ஹில் ரோட்டில் செயல்படும் வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு, தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

இது குறித்து உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.கே. பந்த்கர் கூறுகையில்,

நள்ளிரவு 12.30 மணியளவில் ‘நேச்சர்ஸ் பாஸ்கெட்’ கடையின் தரைத்தள சேமிப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

மும்பை தீயணைப்பு படையைச் சேர்ந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அடித்தளத்தில் உள்ள சேமிப்பு அறையில் தீப்பற்றியிருந்தது கண்டறியப்பட்டது. குழாய் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

அடித்தளத்தில் தீ பற்றியதால் புகை அதிகமாக இருந்தது. மூச்சுக்கருவி உபகரணங்களை அணிந்து உள்ளே சென்று தீயை வெற்றிகரமாக அணைத்தோம்.

என்று கூறினார்.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b