சத்தீஸ்கர் புலிகள் காப்பகத்தில் 3வது புலித்தோல் மீட்பு - 3 வனத்துறையினர் பணியிடை நீக்கம்
சத்தீஸ்கர், 11 ஜூலை (ஹி.ச.) சத்தீஸ்கர் மாநிலம் இந்திராவதி புலிகள் காப்பகத்தில் வேட்டையாடும் கும்பலிடமிருந்து மூன்றாவது புலித்தோல் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றி வந்த மூன்று வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்
சத்தீஸ்கர் புலிகள் காப்பகத்தில் மூன்றாவது புலித்தோல் மீட்பு -   3 வனத்துறையினர் பணியிடை நீக்கம்


சத்தீஸ்கர், 11 ஜூலை (ஹி.ச.)

சத்தீஸ்கர் மாநிலம் இந்திராவதி புலிகள் காப்பகத்தில் வேட்டையாடும் கும்பலிடமிருந்து மூன்றாவது புலித்தோல் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றி வந்த மூன்று வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் கடமை தவறிய செயல்பாடுகளே இதற்குக் காரணம் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், சந்தேகத்திற்குரிய வேட்டைக்காரர்களிடமிருந்து மற்றொரு புலித்தோல் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை மொத்தம் மூன்று புலித்தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், இந்திராவதி புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்ற கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தொடர்ச்சியாக புலித்தோல்கள் கிடைத்து வருவது, அங்கு வேட்டை தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் ஓட்டைகள் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

வனத்துறையினரின் அலட்சியமே இத்தகைய வேட்டைச் சம்பவங்களுக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முதற்கட்ட நடவடிக்கையாக மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேல் அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். வேட்டைக் கும்பலின் பின்னணி, அவர்களுக்கு உள்ளூரில் கிடைத்த உதவிகள் மற்றும் காப்பகத்திற்குள் எத்தனை புலிகள் கொல்லப்பட்டன என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

நாட்டின் முக்கிய புலிகள் காப்பகங்களில் ஒன்றான இந்திராவதியில் அடுத்தடுத்து நிகழும் இந்த சம்பவங்கள், வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளன.

Hindusthan Samachar / vidya.b