தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ...வி.ஆர்.நெடுஞ்செழியன்!
தமிழ்நாடு, 11 ஜூலை (ஹி.ச.) நாவலர் இரா. நெடுஞ்செழியன் (வடக்களத்தூர் ராஜகோபால் நெடுஞ்செழியன்) தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திராவிட இயக்கத் தலைவரும், சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியும் ஆவார். 1920ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி தம
க


தமிழ்நாடு, 11 ஜூலை (ஹி.ச.)

நாவலர் இரா. நெடுஞ்செழியன் (வடக்களத்தூர் ராஜகோபால் நெடுஞ்செழியன்) தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திராவிட இயக்கத் தலைவரும், சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியும் ஆவார்.

1920ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி தமிழ்நாட்டு அரசியல் தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பட்டுக்கோட்டை அருகிலுள்ள திருக்கனாபுரத்தில் பிறந்தார்.

திராவிட இயக்கத்தின் 'நடமாடும் பல்கலைக்கழகம்' என்றும் புகழப்பட்டார்.

அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகிய நான்கு தமிழக முதலமைச்சர்களின் அமைச்சரவைகளிலும் இவர் மூத்த கேபினட் அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பணியாற்றிய தனிச்சிறப்பு மிக்கவர்.

இயற்பெயர்: இரா.கோ. நாராயணசாமிபாண்டிய மன்னன் பெயரால் பின்னர் 'நெடுஞ்செழியன்' என மாற்றிக்கொண்டார்.

பிறப்பு: 11 ஜூலை 1920 திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்.

இறப்பு: 12 ஜனவரி 2000 சென்னை.

சிறப்புப் பெயர்: இவரது சிறந்த சொற்பொழிவுத் திறமைக்காக அறிஞர் அண்ணாவால் நாவலர் என்று அழைக்கப்பட்டார்.

திமுகவில் தொடக்கம்: சி. என். அண்ணாதுரை திமுகவைத் தொடங்கியபோது, அதன் துணைப் பொதுச் செயலாளராகவும் பின்னர் நீண்ட காலம் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

இரண்டு முறை இடைக்கால முதலமைச்சர்:

1969-ல் அறிஞர் அண்ணா மறைந்தபோது முதன்முறையாக இடைக்கால முதலமைச்சரானார்.

1987-ல் எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மறைந்தபோதும் இரண்டாவது முறையாக தற்காலிக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அதிமுகவில் இணைவு:

1977-ல் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் அதை அதிமுகவுடன் இணைத்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், முதன்மைத் தலைவராகவும் (Presidium Chairman) செயல்பட்டார்.

இலக்கிய மற்றும் பத்திரிகைப் பங்களிப்பு:

தம்பி செழியனுடன் இணைந்து 'மன்றம்' என்ற தமிழ் இதழை நடத்தினார். திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'நம் நாடு' இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்தார்.

முக்கிய நூல்கள்:

பண்டைக் கிரேக்கம், நீதிக்கட்சியின் வரலாறு, பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு மற்றும் அவரது சுயசரிதையான வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்.

குடும்பம்:

இவரது மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன், அதிமுகவின் முக்கியப் பேச்சாளராகவும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராகவும் பணியாற்றியவர்.

பிரபல இந்திய டென்னிஸ் வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் இவரது பேரன் ஆவார்.

இவர் தமிழ்நாட்டின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

திராவிட முன்னேற்ற கழகத்திலும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர்.

ஒரு பாராட்டு விழாவின் போது அண்ணாதுரை, இவருக்கு 'நாவலர்' என்ற பட்டம் அளித்தார்.

சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1944ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் கட்சியில் சேர்ந்தார்.

இவர் க.இராசாராமோடு இணைந்து, 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கினார்.

கல்வி அமைச்சராகவும், உணவு அமைச்சராகவும் இருந்த இவர் 2000ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J