Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மாவீரன் அழகுமுத்துக்கோனை புகழந்து தங்களது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில் இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..!
விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துகோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b