இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் - தன்ராஜ் பிள்ளை...!
தமிழ்நாடு, 16 ஜூலை (ஹி.ச.) தன்ராஜ் பிள்ளை (Dhanraj Pillay) இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் மற்றும் இந்திய தேசிய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். அவரது அசாதாரண வேகம் மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்திறன் காரணமாக அவர் டூஃபான
H


தமிழ்நாடு, 16 ஜூலை (ஹி.ச.)

தன்ராஜ் பிள்ளை (Dhanraj Pillay) இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் மற்றும் இந்திய தேசிய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.

அவரது அசாதாரண வேகம் மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்திறன் காரணமாக அவர் டூஃபான் (புயல்) என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

பிறப்பு: ஜூலை 16, 1968 அன்று மகாராஷ்டிராவின் புனே அருகில் உள்ள கட்கி என்ற இடத்தில் இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார் பிறந்தார்.

இவர் 1989ஆம் ஆண்டு தேசிய அணியில் அறிமுகமானார்.

இவர் இந்திய ஹாக்கி அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

போட்டிகள் மற்றும் கோல்கள்: இந்தியாவுக்காக 339 சர்வதேச போட்டிகளில் விளையாடி 120-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.

நான்கு ஒலிம்பிக் போட்டிகள்:

இந்தியாவின் சார்பில் 4 ஒலிம்பிக் போட்டிகளில் (1992, 1996, 2000, 2004) பங்கேற்ற ஒரே ஹாக்கி வீரர் இவராவார்.

உலகக் கோப்பை மற்றும் ஆசிய போட்டிகள்:

தலா 4 உலகக் கோப்பைகள், 4 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 4 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

தங்கப் பதக்கம்: 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவரது தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

இந்திய விளையாட்டுத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நாட்டின் மிக உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது:

1999-2000ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும், 2000ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

தற்போது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுபத்மஸ்ரீ விருது,அர்ஜுனா விருது.

இவர் 15 ஆண்டுகளில் பல போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

Hindusthan Samachar / Durai.J