Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 17 ஜூலை (ஹி.ச.)
தென்னிந்தியாவின் மிகப்பெரிய கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட விழாக்கால மற்றும் மணமகள் நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தும் பிரத்யேக நகைக் கண்காட்சியை கோவையில் இன்று தொடங்கியது.
அபர்ணா சுங்கு தேர்ந்தெடுத்து வடிவமைத்துள்ள இக்கண்காட்சி ஜூலை 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.
கண்காட்சியை கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரவண் குமார் குடூர் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் நகை ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்காட்சியில் தங்கம், வைரம், போல்கி, ஜடாவ், கோயில் நகைகள் மற்றும் பழமையான வடிவமைப்பிலான ஆன்டிக் நகைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினை நகைத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.
மணமகள்களுக்கான பிரத்யேக நகைத் தொகுப்புகள், சிறப்பு நிகழ்வுகளுக்கான ஆடம்பர நகைகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கக்கூடிய பாரம்பரிய வடிவமைப்புகள் இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
Hindusthan Samachar / Durai.J