தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு மீண்டும் பிடிவாரண்ட் - சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 18 ஜூலை (ஹி.ச) மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை அம
High court


சென்னை, 18 ஜூலை (ஹி.ச)

மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கும் நாளன்று ஷாஜி புருஷோத்தமன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பித்தது.

பின்னர் அந்த பிடிவாரண்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன், தண்டனை அறிவிக்கும் நாளில் விசாரணை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஷாஜி புருஷோத்தமன் மீண்டும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையில் சென்னை அமர்வு நீதிமன்றம் மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ