Enter your Email Address to subscribe to our newsletters

புனே, 18 ஜூலை (ஹி.ச.)
புனே மாநகரின் கொந்த்வா பகுதியில் உள்ள வேதாள் நகரில் இன்று காலை பெயிண்ட் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் படுகாயமடைந்துள்ளார்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் புனே தீயணைப்பு படையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெயிண்ட் மற்றும் ரசாயன பொருட்கள் எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதால் தீ மளமளவென பரவி கிடங்கு முழுவதும் சூழ்ந்தது. கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. கொந்த்வா காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே சேத மதிப்பு மற்றும் விபத்திற்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b